கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஹாயாக சுற்றித்திரியும் மயில்கள்

கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஹாயாக சுற்றித்திரியும் மயில்கள் அங்கு நடைபயிற்சி செல்வோரை பரவசப்படுத்துகிறது. தாந்தோணிமலையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகம் ஆகியவை ஒருங்கிணைந்த வளாகத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தின் பின்புறம் அதிகளவு காட்டுப்பகுதிகள் உள்ளன. இதனால், இந்த இரண்டு பகுதிகளை மையப்படுத்தி நூற்றுக்கணக்கான மயில்கள் சுற்றத்திரிகிறது.

இந்நிலையில், இந்த வளாக பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் வாக்கிங் செல்லும் அனைவரும் மயில்களின் நடமாட்டத்தையும், தோகை விரித்து ஆடும் அழகையும் தினமும் ரசித்து பரவசமடைகின்றனர். விவசாயத்துக்கு சில பாதிப்புகளை மயில்கள் ஏற்படுத்தினாலும், இந்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒரு சேர சுற்றித்திரிவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. கலெக்டர் எச்சரிக்கை

 

The post கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஹாயாக சுற்றித்திரியும் மயில்கள் appeared first on Dinakaran.

Related Stories: