கரூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்க்க விண்ணப்பிக்கலாம்

கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் 2023-24 நிதியாண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பில், திறன் வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்த மாவட்டம் ஒன்றுக்கு 3-6 பயனாளிகள் அல்லது குறைந்தபட்சம் 3 பயனாளிகளை தேர்வு செய்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள பயனாளி சம்பந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். பயனாளியிடம் கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். அந்த இடம் மனித குடியிருப்புகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். பயனாளி திட்ட செலவினத்தில் 50 சதவீதம் அல்லது உச்சபட்ச வரையறைகளை ரூ.1.50.625ககு எஞ்சியுள்ள திட்ட செலவினத்தை சொந்த செலவு அல்லது வங்கிக் கடன் மூலம் திரட்ட வேண்டும்.

நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு மற்றும் 4 மாத தீவன செலவு (கோழி வளரும் வரை) மாநில அரசால் வழங்கப்படும். மீதமுள்ள திட்ட செலவிற்கான 50 சதவீத பங்களிப்பை பயனாளி சொந்த செலவில் அல்லது வங்கி மூலமாகவோ திரட்ட வேண்டும். ஒவ்வொரு பயனாளிககும் 250 எண்ணம் 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் 30 சதவீத பழங்குடியினர் மற்றும் பட்டியல் வகுப்பினராக இருக்க வேண்டும். 2022-23ம் ஆண்டு நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்திருக்க கூடாது. 3 ஆண்டு காலம் கோழிப்பண்ணையை பராமரிப்பவராக இருக்க வேண்டும். மேலும், இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பின் தங்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருந்தகத்திற்கு சென்று விண்ணப்பம் அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கரூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்க்க விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: