திண்டுக்கல்லில் தவித்த மபி பெண் பெற்றோரிடம் ஒப்படைப்பு

 

திண்டுக்கல், ஜூன் 5: திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் கடந்த மே 5ம் தேதி பெண் ஒருவர் சுற்றி திரிந்தார். அவரை ரயில்வே பெண் தலைமை காவலர் மீட்டு விசாரணை மேற்கொண்டதில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஜோதி என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அப்பெண்ணின் பெற்றோரை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிவித்தனர். அதன்பின் அவர்கள் அனுப்பி வைத்த ஆதார் விபரங்களின்படி, அப்பெண்ணிற்கு 24 வயது பூர்த்தியடைந்தது தெரியவந்தது. பின்னர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் மூலம் திண்டுக்கல் சகி- ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு அப்பெண் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு வேண்டி அனுப்பி வைக்கப்பட்டார்.

தொடர்ந்து மத்திய பிரதேசம் மாநிலம், ஹர்தா மாவட்டத்தில் உள்ள திமர்னி போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகள், அப்பெண்ணின் தாயார் மாவட்ட காவல் துறை உதவியுடன் வரவழைக்கப்பட்டனர். நேற்று திண்டுக்கல் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் கலெக்டர் பூங்கொடி அப்பெண்ணை அவரது தாயார் மற்றும் திமர்னி போலீஸ் அதிகாரிகாரிகளிடம் முறையாக ஒப்படைத்தார். உடன் திண்டுக்கல் ஏடிஎஸ்பி மணிமாறன், மாவட்ட சமூகநல அலுவலர் புஷ்பகலா, சகி- ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மைய நிர்வாகி ஜான்சி ராணி உள்பட பலர் இருந்தனர்.

The post திண்டுக்கல்லில் தவித்த மபி பெண் பெற்றோரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Related Stories: