உடுமலை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கருணாநிதி 100வது பிறந்தநாள் விழா

 

உடுமலை, ஜூன் 5: உடுமலை கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு, ஒன்றியம் முழுவதும் கொடியேற்றி, ஒன்றிய செயலாளர் தங்கராஜ் (எ) மெய்ஞானமூர்த்தி தலைமையில் கருணாநிதி உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.எலையமுத்தூர், ஆண்டியகவுண்டனூர், ஜக்கம்பாளையம் ஜேஜே நகர், உரல்பட்டி, கண்ணமநாயக்கனூர் உள்ளிட்ட இடங்களில் திமுக கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சிகளில் ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஷியாம் பிரசாத், அவைத்தலைவர் மாரிமுத்து, துணைச் செயலாளர்கள் மலர்விழி, சாமிநாதன், கார்மேகம், பொருளாளர் சுப்பிரமணியம், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்வேல், ராமகிருஷ்ணன், மணியரசு,

இந்து சமய அறங்காவலர் குழு உறுப்பினர் சாமி, உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொழிலாளர் அணி அய்யாவு, ரயில் கே.நாகராஜன், மகளிர் தொண்டரணி லதா, முத்துலட்சுமி, ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் முத்துலட்சுமி, முருகன், சிறுபான்மையினர் அணி லாசர் சுவாமிநாதன், தொண்டரணி மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப அணி நவீன், உதயகுமார், கிருஷ்ணவேணி உட்பட ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

The post உடுமலை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கருணாநிதி 100வது பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Related Stories: