விலகினார் ஹேசல்வுட்: நெசருக்கு வாய்ப்பு

மெல்போர்ன்: இந்திய அணியுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் மோதவுள்ள ஆஸ்திரேலிய அணியில் இருந்து, வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் விலகியுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் உலக டெஸ்ட் பைனல், லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் சேர்க்கப்பட்டிருந்தார். காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த அவர், உடல்தகுதியை நிரூபித்தால் மட்டுமே பைனலில் களமிறங்குவார் என ஆஸி. அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், 100 சதவீத உடல்தகுதியுடன் இல்லாததால் உலக டெஸ்ட் பைனலில் இருந்து ஹேசல்வுட் விலகியுள்ளார். இதைத் தொடர்ந்து, ஹேசல்வுட்டுக்கு பதிலாக மற்றொரு வேகம் மைக்கேல் நெசர் ஆஸி. அணியில் இடம் பிடித்துள்ளார்.

The post விலகினார் ஹேசல்வுட்: நெசருக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: