நாளை மறுநாள் 500 அரசு மருத்துவமனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னை:சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது; தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி மற்றும் 63 நகராட்சிகளில் 708 மருத்துவமனைகள் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. கடந்த ஓராண்டில் அறிவிக்கப்பட்ட 708 மருத்துவமனைகளில் 500 மருத்துவமனைகள் திறக்கும் தருவாயில் உள்ளது. மீதம் உள்ள 208 மருத்துவமனைகளில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் 500 அரசு மருத்துவமனைகளை திறந்துவைக்க உள்ளார். தமிழ்நாட்டில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இந்த 500 மருத்துவமனைக்கு 500 மருத்துவர்கள், 500 செவிலியர்கள், 500 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள விஜயராகவாச்சாரி சாலையில் உள்ள மருத்துவமனையை நாளைமறுநாள் முதல்வர் திறக்கிறார். மீதம் உள்ள 499 மருத்துவமனைகளை காணொலி வாயிலாக திறந்துவைக்க உள்ளார். 500 மருத்துவமனைகள் ஒரேநேரத்தில் திறந்து வைக்கப்பட உள்ளது இதுவே முதன்முறையாகும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

The post நாளை மறுநாள் 500 அரசு மருத்துவமனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: