உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டி; ஷமி சரியான லைனை பிடித்து விட்டால் ஆஸிக்கு சிக்கல்தான்: ரிக்கிபாண்டிங் கணிப்பு

லண்டன்: ஓவல் மைதானத்தில் வரும் 7ம்தேதி இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதுகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ரிக்கிபாண்டிங் கூறுகையில், ‘’பைனலில் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்றால், முகமது ஷமி முன்னின்று கடுமையாக முயற்சி செய்து போட்டியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். ஷமியால் புதிய மற்றும் பழைய பந்துகளில் மிரட்டலாக செயல்பட முடியும்.

அவர் சரியான லெந்தில் தொடர்ந்து பந்துவீசக் கூடியவர். இவர் ஓவலில் ஸ்விங், பவுன்ஸ்களை துல்லியமாக வீசினால் இவரை கண்ட்ரோல் செய்வது கஷ்டம். எனவே ஆஸ்திரேலிய அணி இவருக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒருவேளை முகமது ஷமி, சரியான லைனை பிடித்துவிட்டால், இவர்தான் இந்திய அணிக்கு மேட்ச் வின்னராக இருப்பார். ரோஹித் ஷர்மா இவரை ஒரு துருப்பு சீட்டைப் போல, சரியான நேரத்தில் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கிறது’’ என்று கூறினார்.

கோஹ்லியை கட்டுப்படுத்துவோம்: இந்திய அணியின் விராட் கோஹ்லி, ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் சூப்பர் பார்மில் இருப்பதால், இவர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் விராட் கோஹ்லி குறித்து ஸ்டீவ் ஸ்மித் பேசிய கருத்துகள் ரசிகர்களிடையே பகிரப்பட்டு வருகிறது. அதில், “நீண்ட காலமாக சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்டராக உள்ளவர் விராட் கோஹ்லி. அவர் எப்போதும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாட விரும்புவார். நிச்சயம் அதிக ரன்களையும் சேர்த்துள்ளார். ஆனால் டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் அவரை ரன்களை சேர்க்க விடாமல் தடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

The post உலக டெஸ்ட் சாம்பியன் இறுதி போட்டி; ஷமி சரியான லைனை பிடித்து விட்டால் ஆஸிக்கு சிக்கல்தான்: ரிக்கிபாண்டிங் கணிப்பு appeared first on Dinakaran.

Related Stories: