சச்சினை யாருடனும் ஒப்பிட கூடாது; சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இன்சமாம்தான்: சேவாக் சொல்கிறார்

மும்பை:ஆசியாவிலேயே சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்னை பொறுத்தமட்டில் இன்சமாம் உல்-ஹக் தான் என்று இந்திய அணியின் மாஜி அதிரடி துவக்க ஆட்டக்காரர் சேவாக் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மாஜி அதிரடி துவக்க வீரர் சேவாக் நிகழ்ச்சி ஒன்றில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-ஆசியாவிலேயே சிறந்த நடுவரிசை கிரிக்கெட் வீரர் யார் என்று கேட்டால் அனைவரும் சச்சின் பெயரை தான் சொல்வார்கள்.

ஆனால் நான் பாகிஸ்தான் வீரர் இன்சாமம் பெயரை சொல்வேன். ஏனென்றால் சச்சினை பொதுவான கிரிக்கெட் வீரர்கள் உடன் ஒப்பிடவே கூடாது. அவரை நான் மனிதர்கள் என்ற லிஸ்டிலேயே வைக்கவில்லை. இதனால் அவரை விட்டுவிட்டு மற்ற பேட்ஸ்மேன்களை பொருத்தவரையில் இன்சாமம் தான் சிறந்த வீரராக தெரிகிறார். இன்சாமம் மிகவும் இனிமையானவர்.

இந்தியா, இலங்கை, வங்கதேசம் என அனைத்து நாடுகளிலும் ஒப்பிட்டு பார்த்தால் இன்சாமமை விட சிறந்த வீரர்கள் யாரும் இல்லை என்று நான் நினைக்கிறேன். 2003 காலகட்டத்தில் ஒரு ஓவருக்கு எட்டு ரன்கள் அடிக்க வேண்டும் என்றால் அனைவரும் பதற்றம் அடைவார்கள். ஆனால் இன்சாமம், கவலை படாதீர்கள் பார்த்துக் கொள்ளலாம் என்று தான் சொல்வார்.

10 ஓவருக்கு 80 ரன்கள் அடிக்கவேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் இன்சாமம் வெற்றியை தேடி கொடுப்பார். இதனால் எனக்கு அவரை தான் பிடிக்கும். 120 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இன்சமாம் 8,830 ரன்களும், 378 ஒரு நாள் போட்டிகளில் 11,739 ரன்களும் அடித்திருக்கிறார். கங்குலி, டிராவிட், லஷ்மன், டோனி போன்ற வீரர்கள் எல்லாம் இருக்கும்போது சேவாக் பாகிஸ்தான் வீரர் பெயரை குறிப்பிட்டது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

The post சச்சினை யாருடனும் ஒப்பிட கூடாது; சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இன்சமாம்தான்: சேவாக் சொல்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: