தாழையூத்து துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணி ஒத்திவைப்பு

நெல்லை, ஜூன் 4: நெல்ைல அடுத்த தாழையூத்து துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நாளைய தினம் (5ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் நிர்வாகக் காரணங்களுக்காக இந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. எனவே, வழக்கம்போல் மேற்கண்ட தாழையூத்து துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளைய தினம் மின் விநியோகம் சீராக இருக்கும் என்றும், பராமரிப்பு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தாழையூத்து துணை மின்நிலையத்தில் மின் பராமரிப்பு பணி ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: