இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் விபத்து: மம்தா கோபம்

ஒடிசா விபத்து நடந்த இடத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பார்வையிட்டார். அதன்பின் அவர் கூறியதாவது: இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் விபத்து இது. இந்த விபத்து தொடர்பாக உண்மையை வெளிக்கொணர சரியான விசாரணை தேவை. இந்த வழித்தடத்தில் மோதல் எதிர்ப்பு அமைப்பு செயல்பட்டிருந்தால் விபத்தைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் பயணிகளின் பாதுகாப்பு ரயில்வேயால் புறக்கணிக்கப்படுகிறது. இதற்குப் பின்னால் ஏதாவது இருக்க வேண்டும். நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது மோதல் தடுப்பு முறையை அறிமுகப்படுத்தினேன், அது விபத்துக்களின் எண்ணிக்கையை குறைத்தது. கேரளா, பெங்களூரு மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த சிலரைத் தவிர பலியானவர்களில் பெரும்பாலான பயணிகள் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ரயில்வே அமைச்சர்- மம்தா திடீர் மோதல்: பாலசோர் மாவட்டத்தில் ரயில் விபத்து நடந்த பகுதியை பார்வையிடுவதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று காலை வந்தார். விபத்து நடந்த பகுதியில் மம்தா பேட்டியளிக்கையில்,‘‘ விபத்தில் பலி எண்ணிக்கை 500 ஆகியுள்ளதாக தனக்கு தகவல் வந்துள்ளது’’ என்றார். அவர் அருகே நின்றிருந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறுக்கிட்டு,ஒடிசா அரசின் தரவுகளின்படி மொத்த பலி எண்ணிக்கை 238 ஆகியுள்ளது’’ என்றார். மம்தா பதிலளிக்கையில்,‘‘ 238 பேர் பலி என்பது வெள்ளிக்கிழமை இரவு நிலவரம். இன்னும் 3 பெட்டிகளில் மீட்பு பணிகள் முடிவடையவல்லை. இதனால் பலி அதிகரிக்கலாம். கிழக்கு மண்டலத்தில் ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் விபத்துகளை தடுக்கும் கவாச் கருவிகள் பொருத்தப்படாததால்தான் பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது’’ என குற்றம் சாட்டினார்.

The post இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் விபத்து: மம்தா கோபம் appeared first on Dinakaran.

Related Stories: