பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் ஸ்வியாடெக்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றார். 3வது சுற்றில் சீனாவின் ஜிங்யு வாங்குடன் (21 வயது, 80வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (22 வயது, போலந்து) அதிரடியாக விளையாடி 6-0, 6-0 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்தார். இகா முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்த போட்டி 51 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

மற்றொரு 3வது சுற்றில் களமிறங்கிய அமெரிக்க நட்சத்திரம் கோகோ காஃப் 6-7 (5-7), 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் மிரா ஆண்ட்ரீவாவை (16 வயது, 143வது ரேங்க்) வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 3 நிமிடத்துக்கு நீடித்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் 4-6, 6-4, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் சீனாவின் ஸிஸென் ஸாங்கை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் ஸ்வியாடெக் appeared first on Dinakaran.

Related Stories: