எப்போதுமே வந்தே பாரத் பற்றியே பேசுபவர்கள்… சாதாரண மக்கள் பயணம் செய்யும் ரயில்களின் பாதுகாப்பில் அக்கறை இல்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லி: எப்போதுமே வந்தே பாரத் பற்றியே பேசுபவர்கள், சாதாரண மக்கள் பயணம் செய்யும் ரயில்களின் பாதுகாப்பில் அக்கறை இல்லை என்று காங்கிரஸ் சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சாலிமர்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்கள் மற்றும் பாலசோரில் ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதிய ரயில் விபத்தில் 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 280 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், எப்போதுமே வந்தே பாரத் பற்றியே பேசுபவர்கள், சாதாரண மக்கள் பயணம் செய்யும் ரயில்களின் பாதுகாப்பில் அக்கறை இல்லை என்று காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே அடிப்படை கட்டமைப்புக்கு முன்னுரிமை தர வேண்டும் என எப்போதுமே வலிறுத்தி வந்தேன். புல்லட் ரயில் திட்டத்தில் அதிக நிதி செலவிடுவதை விட்டுவிட்டு ரயில்வேயின் அடிப்படை கட்டமைப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சாதாரண மக்கள் பயணம் செய்யும் ரயில்களுக்கு முக்கியத்துவம் தராமல் இருந்ததே கோர விபத்துக்குக் காரணம். என்று காங்கிரஸ் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு காங்கிரஸ் தேசிய தலைவர் மால்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார். ஒடிசாவில் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளைச் செய்ய காங்கிரஸ் தொடர்களுக்கு கார்கே அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள், பாலசோர் மாவட்டத்துக்கு விரைந்துள்ளனர். ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். பிரதமர், ரயில்வே அமைச்சரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய உள்ளன; முதலில் மீட்புப் பணிகளை மேற்கொள்வோம். என்று கூறினார்.

The post எப்போதுமே வந்தே பாரத் பற்றியே பேசுபவர்கள்… சாதாரண மக்கள் பயணம் செய்யும் ரயில்களின் பாதுகாப்பில் அக்கறை இல்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: