ஒடிசா ரயில் விபத்து: மீட்பு பணியில் ஈடுப்பட்ட உள்ளூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர் நவீன் பட்நாயக்..!!

புபனேஷ்வர்: ஒடிசாவில் நிகழ்ந்த கொடூர ரயில் விபத்து நடந்தப் பகுதியை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் நேரில் சென்று பார்வையிட்டார். பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சாலிமர்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்கள் மற்றும் பாலசோரில் ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதிய ரயில் விபத்தில் 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 288 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரயில் விபத்து சோகம் காரணமாக ஒடிசா அரசு இன்று ஒருநாள் துக்க தினமாக அறிவித்துள்ளது.

இந்த சூழலில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்று ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்தார். ஆய்வுக்கு பின்னர் முதல்வர் நவீன் பட்நாயக் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; இந்த விபத்து மிகவும் சோகமான கோர ரயில் விபத்து.

கோர விபத்தின் இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்பதற்கு ஒரே இரவில் உழைத்த உள்ளூர் மக்களுக்கும், உள்ளூர் தன்னார்வ குழுக்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரயில்வே பாதுகாப்புக்கு எப்போதும் முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். என்று பட்நாயக் கூறினார். பட்நாயக்கின் அறிவுறுத்தலின்படி, காயமடைந்த பயணிகள் கட்டாக் மற்றும் பிற மருத்துவமனைக்களுக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர், இதனால் அவர்கள் விரைவில் குணமடைவார்கள் என கூறப்படுகிறது.

The post ஒடிசா ரயில் விபத்து: மீட்பு பணியில் ஈடுப்பட்ட உள்ளூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர் நவீன் பட்நாயக்..!! appeared first on Dinakaran.

Related Stories: