சிதைந்த உடல்கள்.. தண்டவாளம் முழுக்க ரத்தம் : தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 17 பெட்டிகள்!!

புபனேஷ்வர் : ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 280-க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.விபத்தில் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்… விடிய விடிய மீட்புப் பணிகள் நடந்த நிலையில், தற்போதும் நீடித்து வருகிறது..இந்த நிலையில் ஒடிசாவில் ரயில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாகனாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்ற போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் இருந்து தடம் புரண்ட 3-4 பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தின் மீது விழுந்தன. சில நிமிட இடைவெளியில் எதிர்திசையில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், விழுந்து கிடந்த ரயில் பெட்டிகள் மீது மோதியது. விழுந்து கிடந்த ரயில் பெட்டிகள் மீது மோதியதால் 100 கிமீ அதிகமான வேகத்தில் வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன.

தூக்கி வீசப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு ரயில் மீதும் மோதின. கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 17 பெட்டிகள் தூக்கி வீசப்பட்டு சிதறி விழுந்ததால் அந்த ரயில் பெரும் சேதம் அடைந்தது.கோரமண்டல் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள், ரயில்வே தண்டவாளங்களைத் தாண்டி சாலை ஓரமும் விழுந்தன.3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் முதலில் தடம் புரண்ட ஹவுரா எக்ஸ்பிரஸில் 3 பெட்டிகள் மட்டுமே தடம் புரண்டதால் அதில் சேதம் குறைவு. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் அதிவேகத்தில் வந்து மோதியதால் அந்த ரயிலில் பயணித்தவர்களே அதிகம் உயிரிழந்துள்ளனர்.

The post சிதைந்த உடல்கள்.. தண்டவாளம் முழுக்க ரத்தம் : தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 17 பெட்டிகள்!! appeared first on Dinakaran.

Related Stories: