தூத்துக்குடி உட்பட 4 மாவட்டத்தினர் வீட்டு வசதி வாரிய குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி செயற்பொறியாளர் தகவல்

தூத்துக்குடி, ஜூன் 3: தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி மாவட்டத்தினர் வீட்டு வசதி வாரியம் தொடர்பாக புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டு கோரிக்கை மனுக்கள் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் எட்வின் சுந்தர் சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வீட்டு வசதி வாரிய திட்டங்கள் செயல்படுத்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.

இது தொடர்பாக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் ைவத்தனர். இதற்காக நெல்லை வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக மனுக்கள் பெறப்படுகிறது. இன்று (ஜூன் 3ம் தேதி) முதல் பெட்டி வைக்கப்பட்டு கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. எனவேவீட்டு வசதி தொடர்பான மனுக்களை அலுவலக வேலை நாட்களில் மனு செய்து பொதுமக்கள் தீர்வு பெற்றுக் கொள்ளலாம். மக்களின் குறை தீர்க்க முதல்வரின் முன்னெடுப்பு திட்டம் மூலம் மனு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post தூத்துக்குடி உட்பட 4 மாவட்டத்தினர் வீட்டு வசதி வாரிய குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி செயற்பொறியாளர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: