சகாரா நிறுவன பாலிசிகள் இனி எஸ்பிஐ இன்சூரன்ஸ் வசம்

புதுடெல்லி: சகாரா இந்தியா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் 2 லட்சம் பாலிசிகளை எடுத்து கொள்ளும்படி காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான இர்டாய் எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளது. சகாரா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் நிதி நிலை மோசமடைந்து வருவதைக் கண்டு, இர்டாய் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் எஸ்பிஐ மிகப் பெரிய நிறுவனம் என்பதால் சகாரா ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் பாலிசிகளை எடுத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சகாரா நிறுவன பாலிசிகள் இனி எஸ்பிஐ இன்சூரன்ஸ் வசம் appeared first on Dinakaran.

Related Stories: