அரிசி கொம்பன் யானையின் நடமாட்டத்தை 68 பணியாளர்களை கொண்ட குழு கண்காணிப்பு: தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: தேனி மாவட்டத்தில் அரிசி கொம்பன் யானையின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சுற்றுசூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். யானையின் நடமாட்டம் உடல்நிலையை 4 கால்நடை மருத்துவர்கள் கொண்ட குழு கண்காணித்து வருகிறது.

கேரள வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து அரிக்கொம்பன் யானையை 29.04.2023 அன்று பெரியாறு புலிகள் காப்பக வனப்பகுதியில் கேரள தமிழ்நாடு எல்லையில் விடுவித்தனர். 30.04.2023 முதல் அந்த யானை தமிழ்நாடு வனப்பகுதியில் இருந்து வருகிறது. தமிழ்நாடு வனத்துறையினர் தேனி மாவட்டத்தில் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், பொதுமக்கள் செய்வதோடு,ஸ்ரீவில்லிபுத்தூர் யானையின் மற்றும் யானையின் பாதுகாப்பை மேகமலை புலிகள் காப்பக நடமாட்டத்திற்கு ஆதரவளிக்கும் பணியில் உறுதி வனப்பகுதியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்

கூடுதல் சுப்ரியா சாகு, தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் ஆகியோர் வனப்பகுதியில் 01.06.2023 அன்று நிலைமையை நேரில் கண்டறிந்தனர். ஆர்.வி.ஷஜீவனா, தேனி அவர்களுடனும் மாவட்ட ஆட்சியர் நிபுணர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களுடனும், களக் குழுவின் தயார் நிலையை ஆய்வு செய்தனர். ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து இப்பணிக்கு உறுதுணையாக இருக்க வரவழைக்கப்பட்ட வேட்டைத் தடுப்பு காவலர்கள் மாவூத் மற்றும் காவடி ஆகியோருடனும் கலந்துரையாடினர். யானையின் நடமாட்டம் மற்றும் உடல்நிலையை, 4 கால்நடை மருத்துவர்களைக் கொண்ட குழு கண்காணித்து வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக கோட்ட துணை இயக்குநர் மற்றும் தேனி மாவட்ட வன அலுவலர் ஆகியோரை உள்ளடக்கிய வனத்துறையின் 68 முன்னணி பணியாளர்களைக் கொண்ட நான்கு குழுக்கள் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. இதுதவிர 85 வனத்துறை பணியாளர்களைக் கொண்ட குழுவினரும் பல்வேறு நடவடிக்கைகளில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் மற்றும் யானையின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு வனத்துறையினர், மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

The post அரிசி கொம்பன் யானையின் நடமாட்டத்தை 68 பணியாளர்களை கொண்ட குழு கண்காணிப்பு: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: