உலகத் தமிழர்களின் சொத்து கலைஞர்..மக்கள் மனங்களில் என்றும் ஆட்சி செய்வார்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!!.

சென்னை : சென்னை கலைவாணர் அரங்கில் கலைஞர் நூற்றாண்டு இலச்சினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”தமிழ் சமுதாயத்துக்கு உயிராக இருந்தவர் உதயமான நாள் ஜூன் 3. என் தலைமையிலான திராவிட மாடல் அரசை கலைஞருக்கும், அவரது
புகழுக்கும் காணிக்கையாக்குகிறேன். விடுதலை இந்தியாவில் 13 சட்டமன்ற தேர்தலில் நின்று வென்று காட்டியவர் கலைஞர்.நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கலைஞர்.அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர் கலைஞர். 13 சட்டமன்றத் தேர்தல்களில் நின்று அனைத்திலும் வெற்றி பெற்றவர் கலைஞர்.

கலைஞர் தொடாத துறையுமில்லை, தொட்டு துலங்காத துறையுமில்லை. அரசியல் மற்றும் பொது வாழ்வில் பக்குவமானவர் கலைஞர். நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கலைஞர். மக்களின் மனங்களில் என்றும் கலைஞர் ஆட்சி செய்கிறார்.நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்; கலைஞர் இன்றும் வாழ்கிறார்; மக்களோடு மக்களாக இருந்தவர் கலைஞர், மக்களின் மனங்களை என்றும் ஆட்சி செய்வார்.கவிஞர்களுக்கு எல்லாம் கவிஞராக அரசியல் தலைவர்களுக்கு எல்லாம் தலைவராக இருந்தவர் கலைஞர்.கலைஞர் பெயரால் மாபெரும் நூலகம் மதுரையில் அமைய உள்ளது; கலைஞர் பெயரில் சென்னையில் மருத்துவமனை அமைய உள்ளது.தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்டம் தோறும் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. மக்களின் மனங்களில் என்றும் கலைஞர் ஆட்சி செய்கிறார். கடந்த 50 ஆண்டுகால தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் அடித்தளமிட்டவர் கலைஞர்.

கலைஞரால் பள்ளிப்படிப்பை படித்தவர்கள், கல்லூரி படிப்பை தொட்டவர்கள், வேலை வாய்ப்பை பெற்ற அரசு ஊழியர்கள் கோடிக்கணக்கானோர். கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்வோடு தொடர்புடையவர் கலைஞர். கலைஞர் தமிழ்நாட்டின் சொத்து, உலக தமிழர்களின் சொத்து.சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இந்த அளவுக்கு தொழில் நிறுவனங்கள் உதயமாக கலைஞரே காரணம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கலைஞர் ஆட்சியில்தான் தொழிற்சாலைகள் வந்தன.சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த உள்ளோம்.தமிழ்நாட்டின் வளர்ச்சி, உள் கட்டமைப்பு வசதியை சிங்கப்பூர், ஜப்பான் நாடுகள்” அறிந்து உள்ளன.தமிழ்நாட்டில்தான் எங்களது நிறுவனங்களை தொடங்குவோம் என்று சிங்கப்பூர், ஜப்பான் முதலீட்டாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.உலக மக்கள் அனைவரும் தமிழ்நாட்டை வலம் வர வேண்டும் என்று நினைத்தவர் கலைஞர்.1997-ல் டைடல் பார்க்கை உருவாக்கி தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர் கலைஞர்.கலைஞரின் நூற்றாண்டு விழா புகழ்பாடும் விழாவாக மட்டுமல்ல, தமிழ் சமுதாயத்திற்கு அவர் செய்தவற்றை நினைவுபடுத்தும் விழாவாக இருக்கும்,”என்றார்.

The post உலகத் தமிழர்களின் சொத்து கலைஞர்..மக்கள் மனங்களில் என்றும் ஆட்சி செய்வார்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!!. appeared first on Dinakaran.

Related Stories: