ராயனூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்

கரூர், ஜூன் 2: கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளி கூடுதல் வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

பள்ளி வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே கூடுதல் பள்ளி வளாகம் கட்டப்பட்டு அந்த கட்டிடத்திலும் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால், பாதுகாப்பற்ற சூழலில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த கூடுதல் பள்ளி வளாகத்தை சுற்றிலும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் நலன் கருதி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.எனவே, கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளியை பார்வையிட்டு, பள்ளி வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து தர தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து வரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post ராயனூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: