கரூர் – சேலம் சாலையில் ப்பைகள் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர், ஜூன் 2: கரூர் – சேலம் பைபாஸ் சாலையோரம் குப்பைகள் தீயிட்டு கொளுத்துவதால் ஏற்படும் புகை மூட்டத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். புகையால் டூவீலர்கள் மோதிக் கொண்டு விபத்துக்கள் நடக்கும் இடமாக மாறி வருகிறது. ரூர் – சேலம் பைபாஸ் சாலையில் மண்மங்கலம் அருகே சாலையோரம் சேகரிக்கப்படும் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக வெளியேறும் புகையினால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் கருர் மாவட்டத்தை சுற்றிலும் பைபாஸ் சாலைகள் மட்டுமின்றி மாவட்ட சாலைகளிலும் அதிகளவு நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதை தடுக்க வேண்டும். அதேபோல், கோழி கழிவுகள், இறைச்சி கழிவுகள் போன்றவற்றை கொட்டுவதால் துர்நாற்றம் காரணமாக சாலையில் செல்வோர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இவற்றை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

The post கரூர் – சேலம் சாலையில் ப்பைகள் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: