திருவிடைமருதூர், ஜூன் 2: திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை அருகே நரசிங்கம்பேட்டை சுயம்பு நாதர் கோயிலில் திருமுறை முற்றோதல் வழிபாடு 5 மணி நேரம் நடந்தது. நேற்று வைகாசி மாத சுவாதி நட்சத்திரத்தை ஒட்டி லோகநாயகி அம்பாள் சமேத சுயம்பு நாதர் சுவாமி மற்றும் பரிவார சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தொடர்ந்து 5 மணி நேரம் சிவனடியார்கள், சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் அருளிச்செய்த 7ம் திருமுறையின் 100 பதிகங்களின் 1028 பாடல்களை பன்னிசை மற்றும் தாளங்களுடன் பாடினர்.
The post திருமுறை முற்றோதல் வழிபாடு appeared first on Dinakaran.