ஒட்டன்சத்திரம் ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்டம் கலெக்டர் வழங்கினார்

 

ஒட்டன்சத்திரம், ஜூன் 2: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் 1432ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் கடந்த 24.05.2023 அன்று துவங்கப்பட்டு, தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வருவாய் தீர்வாயத்தின் போது வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பொதுமக்கள் நலன் சார்ந்த பிரச்னைகள் ஆகியவற்றிற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் தகுதியுடைய அனைத்து மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட சிந்தலவாடம்பட்டி, பெரியகோட்டை, ரெட்டியபட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, வீரலப்பட்டி, தாசரிபட்டி, புதுக்கோட்டை ஆகிய வருவாய் கிராமங்களுக்கான பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் 6வது நாளாக நேற்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 23 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 2 நபர்களுக்கு இலவச தையல் இயந்திரம், 5 நபர்களுக்கு குடும்ப அட்டை ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் பூங்கொடி வழங்கினார்.

அப்போது உதவி இயக்குனர் (நில அளவை) சிவக்குமார், போலீஸ் டிஎரு்பி முருகேசன், தாசில்தார் முத்துச்சாமி, வட்ட வழங்கல் அலுவலர் பிரசன்ன வெங்கடேஷ், திமுக நகர செயலாளர் வெள்ளைச்சாமி, நகர்மன்ற தலைவர் திருமலைசாமி, கிராம நிர்வாக அலுவலர் செந்தில் மயில்வாகனன், கிராம உதவியாளர்கள் பைசல்முகமது, விஜயபாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

The post ஒட்டன்சத்திரம் ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்டம் கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: