நடிகர் எஸ்.வி.சேகருக்கு அண்ணாமலை மிரட்டல்

தூத்துக்குடி: நடிகர் எஸ்.வி. சேகருக்கு அண்ணாமலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக முதலமைச்சர் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடு சுற்றுப்பயணம் சென்று வந்தது வரவேற்கக் கூடியது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டக் கூடிய சூழ்நிலை வந்தால் தமிழக பாஜ அதனை நிச்சயம் தடுத்து நிறுத்தும். எஸ்.வி.சேகர், பிராமணர்கள் பாஜ கட்சியில் இருந்து ஒதுக்கப்படுவதாக கூறுகிறார். நான் யாருக்கும் விரோதி அல்ல.

ஆனால் பழைய பஞ்சாங்கத்தை வைத்து என்னை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் முடியாது. எல்லோரையும் அரவணைத்து செல்கிறேன். டெல்லிக்கு சென்று பேசுங்கள். என்னை தூக்குங்கள். ரூ.6 ஆயிரத்து 500 தான் விமான டிக்கெட். நானே டிக்கெட் போட்டுத் தருகிறேன். என்னை தூக்க முயற்சி எடுங்கள். தமிழக பாஜ, எல்லோருக்கும் சொந்தமானது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் நாட்டில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காப்பர் ஏற்றுமதி செய்து வந்த இந்தியா தற்போது இறக்குமதி செய்து வருகிறது. புதிய கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களை உருவாக்கினால்தான் இந்த பகுதி வளர்ச்சி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வழிபட்டார்.

The post நடிகர் எஸ்.வி.சேகருக்கு அண்ணாமலை மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: