உடுமலை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை: சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 21 பேர் சேர்ந்தனர்

 

உடுமலை, ஜூன் 2: உடுமலை அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில் சிறப்புப்பிரிவில் 21 பேர் சேர்ந்தனர். உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2023 – 2024 ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நேற்று முன்தினம் தொடங்கியது. இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன.

சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் 5 பேர், தேசிய மாணவர் படை உறுப்பினர் 1, விளையாட்டுத் துறைப்பிரிவில் 15 பேர் என மொத்தம் 21 பேர் பல்வேறு இளநிலைப் பாடப் பிரிவுகளில் சேர்ந்தனர். இதனைத்தொடர்ந்து, நேற்று முதல் பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. இரு நாட்களில் கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான பி.பி.ஏ.(60), பிகாம் -(சுழற்சி I – 60), பிகாம் (சுழற்சி II – 60), பிகாம் சிஏ (சுழற்சி I – 60 ), பிகாம் சிஏ ( சுழற்சி II -60), இ-காமர்ஸ் (60), பொருளியல்( 50) அரசியல் அறிவியல் (50) கலந்தாய்வு நடைபெறும்.

The post உடுமலை அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை: சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 21 பேர் சேர்ந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: