நூல் விலையில் மாற்றம் இல்லை நூற்பாலைகள் அறிவிப்பு

 

திருப்பூர், ஜூன் 2: கடந்த ஐந்து மாதங்களாக நூல் விலை அதிகரிக்காமல், ஒரே நிலையில் இருந்து வருவது திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. திருப்பூரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும். தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள்.

நூல் விலை உள்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். இந்நிலையில் பருத்தி, பஞ்சுக்கு சர்வதேச அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டதால், கடந்த 2022ம் ஆண்டு துவக்கத்தில், நுால் விலை அபரிமிதமாக உயர்ந்தது. பின்னலாடை உற்பத்திக்கு பயன்படுத்தும் நுால் விலை, வரியுடன் சேர்த்து அதிகபட்சமாக கிலோ 440 ரூபாயாக உயர்ந்தது. ஒப்பந்தம் செய்தபடி ஆடைகளை தயாரித்து அனுப்ப முடியாமல், ஏற்றுமதியாளர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.

The post நூல் விலையில் மாற்றம் இல்லை நூற்பாலைகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: