சில்லிபாயிண்ட்…

* புரோ லீக் ஹாக்கி தொடரில் இந்திய ஆடவர் அணி இன்று மீண்டும் பெல்ஜியம் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 7.10 மணிக்கு லண்டனில் இந்த ஆட்டம் தொடங்கும்.

* பிரான்ஸ் டென்னிஸ் வீரர் கேல் மொன்பில்ஸ்(36) காயம் காரணமாக பிரெஞ்ச் ஓபன் தொடரில் இருந்து விலகியுள்ளார். நடப்புத் தொடரில் முதல் சுற்றில் வெற்றிப் பெற்றிருந்த கேல், 2008ம் ஆண்டு அரையிறுதி வரை முன்னேறி இருந்தார்.

* குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிரடி வீரர் சாய் சுதர்சன்(21), ‘ஹர்திக் பாண்டியா போன்ற கேப்டன் கீழ் பணியாற்றுவது பெரிய வரம். உங்கள் திறமையை வெளிப்படுத்த நம்பிக்கையையும், வாய்ப்பையும் அவர் ஏற்படுத்தி தருவார். மேலும் உங்கள் வசதிக்கேற்ப சூழலை உருவாக்கி தருவார். சில நல்ல பந்துகளை நான் ஆடாமல் விட்ட போதும் ஊக்கப்படுத்த தவறவில்லை’ என்று கூறியுள்ளார்.

* நட்சத்திர கால்பந்து வீரர் லியோனஸ் மெஸ்ஸி(அர்ஜென்டீனா). இப்போது பிரான்சின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(பிஎஸ்ஜி) அணிக்காக விளையாடி வருகிறார். அவர் சவுதி அரேபியாவில் உள்ள கால்பந்து அணியுடன் விரைவில் இணைய உள்ளார். அதனால் பிஎஸ்ஜி அணிக்காக மெஸ்ஸி தனது கடைசி ஆட்டத்தில் நாளை களம் காண இருக்கிறார்.

* இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியஷிப் இறுதி ஆட்டம் ஜூன் 7ம் தேதி லண்டனில் தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆஸியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ‘இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் புஜாரா முக்கியத் தூண் போன்றவர். இறுதி ஆட்டத்துக்கு முன்பாகவே அவர் இங்கிலாந்தின் உள்ளூர் தொடர்களில் விளையாடிய அனுபவத்தையும் வைத்திருக்கிறார். அதேபோல் விராத் கோஹ்லி மிகச்சிறந்த வீரர். இவர்கள் இருவரையும் எதிர்கொள்ள ஆஸி அணி தயாராகிக் கொள்வது அவசியம்’ என்று தெரிவித்துள்ளார்.

The post சில்லிபாயிண்ட்… appeared first on Dinakaran.

Related Stories: