பாதியில் நிற்கும் தகன மேடை பணி

புழல், ஜூன் 1: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், 24வது வார்டு புழல் ஜிஎன்டி சாலை அருகில் புழல் மயான பூமியின் எரிவாயு தகனமேடை பழுதடைந்தது. இதை சரி செய்ய மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் தகனமேடை மூடப்பட்டது. இந்த தகன மேடையை பயன்படுத்தும் சுற்றுப்புற பகுதி மக்கள் மாதவரம் சாஸ்திரி நகரில் உள்ள எரிவாயு மயான பூமியை பயன்படுத்தும்படி கடந்த நவம்பர் 1ம் தேதி அறிவிக்கப்பட்டது. 3 மாதங்களில் சரிசெய்யப்படும் என சொல்லப்பட்டு 6 மாதங்களை கடந்தும் தகன மேடை இன்னும் சரி செய்யும் பணி முடியவில்லை. இதனால் சடலத்துடன் 5 கி.மீ. அலைந்து பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.எனவே, உரிய நடவடிக்கை எடுத்து புழல் மயான பூமி எரிவாயு தகன மேடையை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பாதியில் நிற்கும் தகன மேடை பணி appeared first on Dinakaran.

Related Stories: