டிஎன்பிஎல் 7வது தொடர் ஜூன் 12ம் தேதி தொடக்கம்

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போன்று தமிழ்நாடு அளவில் தமிழ் நாடு பிரிமீயர் லீக்(டிஎன்பிஎல்) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் நெல்லை கிங்ஸ், சேப்பாக் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் என 8 அணிகள் களம் கண்டு வருகின்றன. இந்நிலையில் டிஎன்பிஎல் போட்டியின் 7வது தொடர் ஜூன் 12ம் தேதி தொடங்கும் என்று தமிழ் நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இறுதி ஆட்டம் ஜூலை 12ம் தேதி நடைபெறும்.

ஆட்டங்கள் திண்டுக்கல், சேலம், கோவை, நெல்லை ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெறும். சென்னை மட்டுமின்றி, கடந்த ஆண்டுகளில் டிஎன்பிஎல் ஆட்டங்கள் நடந்த திண்டுக்கல்லிலும் இந்த முறை எந்த ஆட்டமும் நடைபெறாது.
கோவையில் ஜூன் 12 முதல் 30ம் தேதி வரையிலும், நெல்லையில் ஜூலை 1 முதல் 5ம் தேதி வரையிலும் லீக் ஆட்டங்கள் நடக்கும். சேலத்தில் ஜூலை 7, 8 தேதிகளில் முதல் தகுதிச் சுற்று, வெளியேறும் சுற்று ஆட்டங்களும், நெல்லையில் ஜூலை 10ம் தேதி 2வது தகுதிச் சுற்று ஆட்டமும், 12ம் தேதி இறுதி ஆட்டமும் நடத்தப்படும். இப்படி மொத்தம் 25 நாட்கள் 32 ஆட்டங்கள் நடைபெறும். அது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக் காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

The post டிஎன்பிஎல் 7வது தொடர் ஜூன் 12ம் தேதி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: