முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நாளை விவசாய பாசனத்திற்காக நீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

தேனி: முல்லை பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 14,707 ஏக்கர் இருபோக விவசாய நிலங்களுக்கு அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடிநீர் நாளை திறக்கப்படவுள்ளது. அதேசமயம், நாளை முதல் 120 நாட்களுக்கு குடிநீருக்காக 100 கன அடி பாசனத்திற்காக 300 கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆங்கிலேயப்‌ பொறியாளர்‌ ஜான்‌ பென்னிகுவிக்‌ அவர்களின்‌ பெருமுயற்சியால்‌ தமிழ்நாட்டின்‌ தென்மாவட்டங்களில்‌ நிலவிய கடும்‌ வறட்சியைப்‌ போக்கவே 1895 ஆம்‌ ஆண்டு முல்லைப்‌ பெரியாறு அணை கட்டப்பட்டது. விடுதலைக்குப்‌ பிறகு எல்லைப்‌ பிரிப்பின்போது முல்லைப்‌ பெரியாறு அணை அமைந்துள்ள இடுக்கி நிலப்பகுதியை கேரளாவிடம்‌ தமிழ்நாடு இழந்தது.

இருப்பினும்‌ 1970 ஆம்‌ ஆண்டு கேரளாவுக்கும்‌, தமிழ்நாட்டிற்கும்‌ ஏற்பட்ட புதிய ஒப்பந்தத்தின்படி முல்லைப்‌ பெரியாறு அணைப்பகுதியின்‌ நிலத்தையும்‌, நீரையும்‌ பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு ஆண்டும்‌ நில வரிப்பணமாக ரூபாய்‌ 2.5 இலட்சமும்‌, பின்‌உற்பத்திக்கான உபரி வரிப்பணமாக ரூபாய்‌ 7.5 இலட்சமும்‌ கேரள அரசுக்கு, தமிழ்நாடு அரசு செலுத்திவருகிறது. அணையைப்‌ பாதுகாத்துப்‌ பராமரிக்கும்‌ உரிமை தமிழ்நாடு அரசின்‌ வசம்‌ இருக்குமென்றும்‌ முடிவு செய்யப்பட்டது. அணைப்‌ பாதுகாப்பையும்‌, தமிழ்நாடு அரசின்‌ அணையைப்‌ பாதுகாக்கும்‌ உரிமையையும்‌ உச்சநீதிமன்றமே உறுதி செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

The post முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நாளை விவசாய பாசனத்திற்காக நீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: