செப்டிக்டேங்க் கழிவு நீரை அகற்ற ரூ.4 கோடி மதிப்பில் கழிவு கசடு மேலாண்மை மையம் தயாராகிறது: மாநகராட்சி ஆணையர் பணிகளை ஆய்வு

சிவகாசி: சிவகாசி மாநகராட்சி சார்பில் பேர்நாயக்கன்பட்டி அருகே செட்டிக்டேங்க் கழிவு நீர் அகற்ற கழிவு கசடு மேலாண்மை மையம் ரூ.4 கோடி மதிப்பில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிவகாசி மாநகராட்சி பகுதியில் செட்டிக் டேங்க் கழிவு அகற்றும் வாகனங்கள் முறையான உரிமம் பெறாமல் இயங்கின. மாநகராட்சி ஆணையாளர் சங்கரன் கழிவு நீர் வாகனங்கள் உரிமம் பெற்று விதி முறைப்படி கழிவு நீர் அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும். விதி மீறி செயல்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்திருந்தார். இதை தொடர்ந்து விதிமீறி செயல்பட்ட இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் அகற்றப்படும் கழிவு நீர் திறந்த இடங்களில் கொட்டப்பட்டது. மாநகராட்சி பகுதியில் கழிவு நீர் அகற்றும் மையம் செயல்படவில்லை. ேபர்நாயக்கன்பட்டி அருகே ரூ.4 கோடி மதிப்பில் செப்டிக் டேங்க் கழிவு அகற்றும் கழிவு கசடு மேலாண்மை மையம் அமைக்கும் பணியை விரைந்து செயல்படுத்த ஆணையாளர் உத்தரவிட்டார். இங்கு 4 ெதாட்டிகள் அமைக்கப்பட்டு செப்டிக் டேங்க் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படவுள்ளது. மாநகராட்சி பகுதியில் உரிமம் பெற்ற செப்டி டேங்க் வாகன உரிமையாளர்கள் கழிவு நீரை இந்த மையத்தில் வந்து கொட்ட வேண்டும். கழிவு நீரை அகற்ற மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட தொகை செப்டிக் டேங்க் உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும்.

மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதால் விபத்து ஏற்பட்டு பலர் பலியாகியுள்ளனர். எனவே கழிவு நீரை உரிமம் பெற்ற வாகன உரிமையாளர்கள் மூலம் மட்டுமே அகற்ற வேண்டும். முறையான உரிமம் பெறாதவர்கள் கழிவு நீரை அகற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டு உரிமையாளர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவில் கிரிமினல் வழக்கு பதியப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

The post செப்டிக்டேங்க் கழிவு நீரை அகற்ற ரூ.4 கோடி மதிப்பில் கழிவு கசடு மேலாண்மை மையம் தயாராகிறது: மாநகராட்சி ஆணையர் பணிகளை ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: