விநாயகர் கோயிலை புனரமைக்க கோரிக்கை

 

தேனி, மே 31: தேனி ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் திலகர் தலைமையிலான நிர்வாகிகள் நேற்று தேனி கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில் கூறியிருப்பதாவது: வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயிலுக்கு பாத்தியப்பட்டு இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட வாகை வென்ற விநாயகர் கோயில் பராமரிப்பின்றி உள்ளது.

இதேபோல கன்னீஸ்வரமுடையார் கோயில்வளாகத்தில் உள்ள விநாயகர் கோயில் சன்னதியின் மேல்புறத்தில் பல ஆண்டுகளாக கலசம் இல்லாமல் உள்ளது. எனவே, இந்து சமய அறநிலையத்துறை மூலம் வாகை வென்ற விநாயகர் கோயில் சீிரமைக்கவும், கன்னீஸ்வரமுடையார் கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலை சீரமைத்து கும்பாபிசேகம் நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post விநாயகர் கோயிலை புனரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: