மானாமதுரையில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா

மானாமதுரை, மே 31: மானாமதுரையில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளை, நேற்று எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் திறந்து வைத்தார். மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 13ல் அழகர்கோவில் தெரு, பழைய ராமநாதபுரம் ரஸ்தாவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட புதிய பயணியர் நிழற்குடை திறப்பு விழா நடந்தது. நிழற்குடையை மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் திறந்து வைத்தார். வட்ட செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிழற்குடையை சுற்றி நிழல் தரும் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 13வது வார்டு கவுன்சிலர் மணிமேகலை செந்தில்குமார், 2வது வார்டு கவுன்சிலர் இந்துமதி திருமுருகன், மாவட்ட பிரதிநிதி அய்யாசாமி, நிர்வாகிகள் தில்லை புவியரசு, அஜித் பிரபு, பாலாஜி, வேலுச்சாமி, ராமலிங்கம், சந்திரன், நடராஜன், வளர்மதி, முத்துப்பாண்டி, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போல் மானாமதுரை ஒன்றியத்துக்கு உட்பட்ட ராஜகம்பீரத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நிழற்குடை மற்றும் நகராட்சி பகுதியில் பைபாஸ் ரோடு துவங்கும் இடத்தில் முனியாண்டி கோயில் அருகே கட்டப்பட்டுள்ள நிழற்குடை ஆகியவற்றையும் எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் நேற்று திறந்து வைத்தார்.

The post மானாமதுரையில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: