அவிநாசி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் எம்எல்ஏ.விடம் வழங்கல்

திருப்பூர், மே 31: திருப்பூர் வடக்கு மாவட்டம், அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவிநாசி ஒன்றியம் மற்றும் சேவூர் ஒன்றியத்தில், அவிநாசி தி.மு.க. சார்பில், பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் சேர்க்கை படிவங்களை திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான செல்வராஜிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணநம்பி, அவிநாசி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ், சேவூர் ஒன்றிய செயலாளர் பால்ராஜ், வடக்கு மாநகர அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் எம்.எஸ்.மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

The post அவிநாசி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் சேர்க்கை படிவம் எம்எல்ஏ.விடம் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: