தின்னர் குடித்து வாலிபர் தற்கொலை முயற்சி

 

பல்லடம், மே 31: பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகர் பகுதியில், அட்டைப்பெட்டிகள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு மணிகண்டன் (19) என்பவர் அவரது சகோதரருடன் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சம்பளம் வாங்கிய மணிகண்டன், சிறிது செலவு செய்து விட்டு மீதமுள்ள சம்பளப்பணத்தை அவரது அண்ணனிடம் கொடுத்ததாகவும் அப்போது அவரது அண்ணன் ஏன் செலவு செய்தாய் என கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மணிகண்டன் தனியார் நிறுவனத்தில் இருந்த பெயிண்டிற்கு கலக்கும் தின்னரை எடுத்துக் குடித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த உடன் பணிபுரியும் தொழிலாளர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

The post தின்னர் குடித்து வாலிபர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: