பூரண மது விலக்கு அமல்படுத்த பாஜ தீர்மானம்

 

பல்லடம், மே 31: தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என, பாஜ சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்லடம் தாலுகா பொங்கலுார் மேற்கு மண்டல பாஜ செயற்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ் குமார், பொதுச் செயலாளர் விஷ்ணுராம், கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் தென்னை விவசாயம் வாழ்வாதாரம் பெருக, தமிழகம் முழுவதும் கள் இறக்க, தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். எண்ணற்ற குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருவதால், பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். பலத்த காற்றினால் சேதம் அடைந்த வாழை மரங்களுக்காக, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பல்லடம் புறவழிச்சாலை திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாய அணி பிரிவு மாவட்ட நிர்வாகிகள், மண்டல மற்றும் கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

The post பூரண மது விலக்கு அமல்படுத்த பாஜ தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: