மினி லாரி மோதி 5 ஆட்டோக்கள் சேதம்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை தொழுப்பேடு பஸ் நிலையம் பகுதியில் சவாரி செல்வதற்காக ஆட்டோக்கள் நிறுத்தி வைத்திருப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று சென்னையிலிருந்து பண்ருட்டியை நோக்கி சென்ற மினி வேன் நிலை தடுமாறி ஆட்டோ ஸ்டாண்டுக்குள் புகுந்து நிறுத்தப்பட்டிருந்த 5 ஆட்டோக்கள் மீது மோதியது.

இதில், 5 ஆட்டோக்கள் அருகில் இருந்த பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த சேதமடைந்தது. அப்போது, ஆட்டோவில் அமர்ந்திருந்த இருவர் காயமடைந்தனர். ஓட்டுனருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

The post மினி லாரி மோதி 5 ஆட்டோக்கள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: