ஹாங்காங்கில் பன் திருவிழா : 60 அடி உயர கோபுரத்தில் ஏறி பன்களை பறித்த வீரர்கள்!!

ஹாங்காங்கின் சியுங் சாவ் தீவில் வருடத்தில் ஒருமுறை பன் திருவிழா நடைபெறும். இந்நிலையில் இந்த வருடமும் அந்தத் திருவிழா நடைபெற்றுள்ளது.அதாவது, 60 அடி உயரத்துக்கு பன் கோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது.இதில் இன்னுமொரு அம்சம் என்னவென்றால், கோபுரத்தின் உச்சிக்கு சென்று அங்கிருக்கும் பன்னை வெற்றிகரமாக பறிக்கும் நபர், அவரின் குடும்பத்துக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார் என்பது அப்பகுதியிலுள்ளவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இம் முறை இந்த பன் கோபுரத்தில் ஏறிய 12 வீரர்கள் தங்களால் முடிந்தளவு பன்களை கோபுரத்திலிருந்து பறித்தனர்.இதனால் அந்தத் தீவில் வீதிகளில் வண்ணமயமான ஊர்வலங்கள் நடைபெற்றன.

The post ஹாங்காங்கில் பன் திருவிழா : 60 அடி உயர கோபுரத்தில் ஏறி பன்களை பறித்த வீரர்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: