அடிப்படை உறுப்பினர் உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி..!!

சென்னை: மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். திருப்பூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருப்பூர் துரைசாமி, மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என அண்மையில் திருப்பூர் துரைசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், மதிமுகவின் தற்போதைய செயல்பாடுகள் வருத்தம் அளிக்கிறது. மதிமுக துவக்கப்பட்ட காலத்தில் வைகோவின் வாரிசு அரசியலுக்கு எதிரான உணர்ச்சிமிகு உரைகளை கேட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் வைகோவின் பேச்சில் உறுதியும், உண்மையும் இருக்கும் என்று நம்பி வைகோவை ஆதரித்தனர். ஆனால் தற்போது மதிமுக எதிர்காக உருவாக்கப்பட்டதோ அதிலிருந்து விலகி வாரிசு அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

திருப்பூர் துரைசாமிக்கு வைகோ, துரை வைகோ உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். திருப்பூர் துரைசாமியின் கருத்து மதிமுகவுக்குள் விவாதமான நிலையில் மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

The post அடிப்படை உறுப்பினர் உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி..!! appeared first on Dinakaran.

Related Stories: