ஐபிஎல் தொடரில் 250வது போட்டியில் விளையாடிய ஒரே வீரர்… தோனியின் சாதனைகளை என்னென்ன???

சென்னை : ஐபிஎல் அணி கேப்டனாக அதிக போட்டிகளில் வெற்றிகளை குவித்து சாதனை படைத்துள்ள தோனி சென்னை அணிக்காக 5வது முறை கோப்பை வென்று அசத்தியுள்ளார்.

*மகேந்திர சிங் தோனி தலைமையில் 14 ஐபிஎல் சீசன்களில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 முறை அரை இறுதி அல்லது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

*சென்னை அணி 11 முறை இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ள நிலையில், தோனி கேப்டனாக இருந்து 10 முறை இறுதி போட்டிகளில் விளையாடி உள்ளது.

*ஐபிஎல் தொடரில் 250வது போட்டியில் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ள தோனி 349 பவுண்ட்ரிகள், 239 சிக்ஸர்களுடன் இதுவரை 5,082 ரன்கள் குவித்துள்ளார்.

*சென்னை அணிக்கு 5வது முறை கோப்பையை வென்று கொடுத்துள்ள தோனி, மும்பை அணி கேப்டன் ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

*ஐபிஎல் அணி கேப்டனாக 133 போட்டிகளில் வெற்றியை தேடி தந்து தோனி முதலிடத்திலும் 87 வெற்றிகளுடன் ரோஹித் ஷர்மா 2ம் இடத்திலும் உள்ளார்.

The post ஐபிஎல் தொடரில் 250வது போட்டியில் விளையாடிய ஒரே வீரர்… தோனியின் சாதனைகளை என்னென்ன??? appeared first on Dinakaran.

Related Stories: