தஞ்சாவூர், மே 30: குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்க கோரி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் மாற்றுத்திறனாளி பெண் மனு அளித்து கோரிக்கை விடுத்தார். அந்த மனுவில் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் மாதக்கோட்டை சாலை ராஜாளியர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தி(36). இவர் மாற்றுத்திறனாளி ஆவர். எனது அம்மா சரோஜா. இவர் புற்றுநோயால் அவதிபட்டு வருகிறார். எனது தந்தை எங்களை விட்டு பிரிந்து வேறு இடத்தில் வசித்து வருகிறார். நான் கடையில் தினக்கூலியில் வேலை பார்த்து வருகிறேன். எனவே எனக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கி உதவி செய்ய வேண்டும். அதேபோல் நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். என்னுடைய வருமானத்தில் வீட்டு வாடகை கொடுப்பதற்கு மிகவும் சிரமாக உள்ளது. எனவே, குடிசை மாற்று வாரியத்தில் எங்களுக்கு வீடு வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும். எனவே, மாவட்ட கலெக்டர் இதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
The post குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டும் கலெக்டரிடம் மாற்றுத்திறனாளி கோரிக்கை appeared first on Dinakaran.