தேனியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

 

தேனி, மே 30: தேனியில் விஷச்சாராய பலியை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி மாவட்ட அதிமுக சார்பில், தேனி நகர் பங்களாமேட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளர் எஸ்டிகே ஜக்கையன் தலைமை வகித்தார். முன்னாள் எம்பி பார்த்திபன் முன்னிலை வகித்தார். தேனி நகர செயலாளர் வக்கீல் கிருஷ்ணகுமார் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் சற்குணம், முறுக்கோடை ராமர், மாவட்ட பொருளாளர் சோலைராஜ், ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர்கள் வரதராஜன்,

லோகிராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன், முன்னாள் வாரியத்தலைவர் சதக்கத்துல்லா, எல்லப்பட்டி முருகன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் தவமணி, முன்னாள் சேர்மன் கூடலூர் அருண்குமார், வடபுதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் அன்னப்பிரகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ பெரியவீரன், இளையநம்பி, பெரியகுளம் பழனியப்பன் , வைகை பாண்டி ,பிசிபட்டி பேரூர் செயலாளர் தீபன்சக்கரவர்த்தி, அருண்மதிகணேசன், டாக்டர் தனலட்சுமி, போடிசேதுராமன், நாரயணசாமி தேனி நகர துணை செயலாளர் சுந்தர பாண்டியன். உள்பட சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

The post தேனியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: