உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஆஸி. அணியில் ஹேசல்வுட்

மெல்போர்ன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணியுடன் மோதவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7ம் தேதி தொடங்க உள்ள இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி பேட் கம்மின்ஸ் தலைமையில் களமிறங்குகிறது. மொத்தம் 15 வீரர்கள் அடங்கிய அணியில், காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் சேர்க்கப்பட்டுள்ளார். உடல்தகுதியை நிரூபிக்கும்பட்சத்தில், பைனலில் இவர் களமிறங்குவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

மிட்செல் மார்ஷ், மேத்யூ ரென்ஷா இருவரும் மாற்று வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித் (துணை கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி (கீப்பர்), கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ் (கீப்பர்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நாதன் லயன், டாட் மர்பி, மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர்.

The post உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஆஸி. அணியில் ஹேசல்வுட் appeared first on Dinakaran.

Related Stories: