ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி அரையிறுதியில் இந்தியா

சலாலா: ஜூனியர் ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் அரையிறுதியில் விளையாட, நடப்பு சாம்பியன் இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. ஏ பிரிவில் நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் தாய்லாந்து அணியை எதிர்கொண்ட இந்தியா கோல் மழை பொழிந்தது. இப்போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியா 17-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று அரையிறுதிக்கு முன்னேறியது (10 புள்ளி). அங்கத் சிங் 4 கோல் அடித்து அசத்தினார். இந்த வெற்றியால், மலேசியாவில் நடைபெற உள்ள (டிச. 5-16) ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பையும் இந்தியா உறுதி செய்துள்ளது.

The post ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி அரையிறுதியில் இந்தியா appeared first on Dinakaran.

Related Stories: