ஸ்டெபிலைசர் வெடித்து இளம்பெண் பலி

நெல்லை: நெல்லை மாவட்டம் விகேபுரம் அருகே அகஸ்தியர்பட்டியை சேர்ந்தவர் சேகர் (60). மனைவி சுந்தரி. இவர்களது மகள் சுபா (24). பிகாம் பட்டதாரியான இவர், பட்டய கணக்கு பயிற்சி (சிஏ) முடித்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 6 மணி அளவில் வீட்டில் பிரிட்ஜ் மேல் வைக்கப்பட்டிருந்த `ஸ்டெபிலைசர்’ திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதன் அருகில் தூங்கிய சுபா உடலில் தீப்பற்றி மளமளவென எரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சுபாவின் அலறல் சத்தம் கேட்டு பதறி எழுந்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீயில் கருகி சுபா பலியானதாக தெரிகிறது. இதுகுறித்து விகேபுரம் போலீசார் கூறுகையில், ‘பிரேத பரிசோதனை அறிக்கை பெறப்பட்ட பின்னரே சுபா எப்படி இறந்தார் என்பது உறுதியாகும்’ என்றனர்.

The post ஸ்டெபிலைசர் வெடித்து இளம்பெண் பலி appeared first on Dinakaran.

Related Stories: