கலெக்டரை ஒருமையில் பேசிய அதிமுக மாவட்ட செயலாளர்: நேர்மையான அதிகாரியை திட்டியதால் ஊழியர்கள் கொதிப்பு

ஊட்டி:  அதிமுக சார்பில் ஊட்டியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதிமுக மாவட்ட செயலாளர் வினோத் தலைமை வகித்து பேசுகையில், நீலகிரி மாவட்ட கலெக்டரை ஒருமையில் பேசினார். ‘‘மாவட்ட கலெக்டர் என்று சொல்லிக் கொள்ள உனக்கு வெட்கமாக இல்லையா?, எப்படி இந்த மாவட்டத்துக்கு நீ கலெக்டரா வந்தியோ? எங்களின் சாப காலமோ என்னமோ? உன்னையெல்லாம் மாவட்ட கலெக்டர் என்று சொல்ல வேண்டிய சூழ்நிலை’’ என குற்றம்சாட்டினார். இவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் ஏன் இப்படி பேசினார் என்ற பரபரப்பும் அங்கு எழுந்துள்ளது. நேர்மையான அதிகாரியான கலெக்டர், தவறு செய்ய இடம் கொடுப்பதில்லையாம். தனக்கு டெண்டர் கொடுக்கும்படி மாவட்டச் செயலாளர் தொடர்ந்து கேட்டு வந்ததாகவும், அவர் கொடுக்க மறுத்ததால் இவ்வாறு பொது இடத்தில் திட்டியதாகவும் அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாவட்டச் செயலாளர் கலெக்டரை இவ்வாறு திட்டியதால் ஊழியர்கள் கடும் கோபத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர்களை கலெக்டர் சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

The post கலெக்டரை ஒருமையில் பேசிய அதிமுக மாவட்ட செயலாளர்: நேர்மையான அதிகாரியை திட்டியதால் ஊழியர்கள் கொதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: