ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார்!

அகமதாபாத்: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார். 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் – ஹர்திக் பாண்ட்யா தலையிலான குஜராத் டைட்டன்ஸ் மோத உள்ளது. அகமதாபாத்தில் இறுதிப்போட்டி நேற்று நடைபெறவிருந்த நிலையில் கனமழை காரணமாக ஆட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அகமதாபாத்தில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் செய்து வருகிறது.

சென்னை:- ருதுராஜ் கெய்குவாட், டெவன் கான்வே, ரஹானே, மொயின் அலி, அம்பதி ராயுடு, ரவிந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), தீபக் சஹார், மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே, மகீஷா தீக்ஷனா அணியில் விளையாடுகின்றனர்.

குஜராத்:- விருதிமன் சஹா, சுப்மன் கில், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் தெவாட்யா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் சர்மா, முகமது ஷமி அணியில் விளையாடுகின்றனர்.

The post ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார்! appeared first on Dinakaran.

Related Stories: