ஜார்கண்ட் ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் பலி..!!

ராஞ்சி:  ஜார்க்கண்ட் தன்பாத்தின் நிஷித்பூர் ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  தன்பாத் அருகே நிச்சித்பூர் ரயில் பாதை அருகே பழுது நீக்கும் பணி நடந்து வந்தது. அப்போது, 25,000 வோல்ட் உயர் மின்னழுத்த கம்பி உடைந்தது. அப்போது அங்கு பணிபுரிந்த 6 தொழிலாளர்கள் உயர் மின்னழுத்த கேபிள் அறுந்து விழுந்ததில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தன்பாத் ரயில்வே கோட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கல்காவில் இருந்து ஹவுரா செல்லும் நேதாஜி எக்ஸ்பிரஸ் ரயிலும் நிறுத்தப்பட்டுள்ளது. நேதாஜி எக்ஸ்பிரஸ் டெத்துல்மாரி நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஹவுராவில் இருந்து பிகானேர் செல்லும் பிரதாப் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் தன்பாத் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ரெயில்வே டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு சாலை மார்க்கமாக சென்றுள்ளனர்.

The post ஜார்கண்ட் ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 6 தொழிலாளர்கள் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: