பாஜகவை வீழ்த்தும் யுக்திகளை வகுப்பதற்கான எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 12ல் நடைபெறுகிறது!!

டெல்லி : நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் யுக்திகளை வகுப்பதற்கான எதிர்கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் வரும் ஜூன் 12ம் தேதி நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் பாஜக அல்லாத ஆட்சி அமைய எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றனர். இதற்காக எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார்.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநில முதலமைச்சர்களை தனித்தனியே சந்தித்து பேசியிருந்தார். கடந்த வாரம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருடனம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். அவர்கள் விரைவில் எதிர்கட்சிகளின் மகா கூட்டம் நடைபெறும் என்று கூறி இருந்தனர்.

இந்த நிலையில் நிதிஷ்குமார் தலைமையில் ஜூன் 12ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வது குறித்து வலியுறுத்தப்படும் என்றும் இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி உள்ளிட்ட 18 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

The post பாஜகவை வீழ்த்தும் யுக்திகளை வகுப்பதற்கான எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 12ல் நடைபெறுகிறது!! appeared first on Dinakaran.

Related Stories: