மத்திய பிரதேசம் பிந்த் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்..!!

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசம் பிந்த் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானப்படையின் அப்பாச்சி ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிந்த் பகுதியில் உள்ள ஜக்னௌலி பகுதியில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதால், விமானத்திற்கோ, ராணுவத்தினருக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

விவசாய நிலத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியதை அடுத்து அருகில் உள்ள கிராம மக்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து விமானப்படை தலைமையகத்திற்கு தகவல் அனுப்பப் பட்டுள்ளதாகவும் மீட்பு மற்றும் தொழில்நுட்ப குழுவினர் சம்பவ இடத்திற்கு வருவதாகவும் கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் என்ன வகையான தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது என்பது பற்றியும் தகவல் தெரியவில்லை.

 

The post மத்திய பிரதேசம் பிந்த் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: