அதிமுக முன்னாள் அமைச்சருக்கு ஆதரவாக டெண்டர் விட்ட விவகாரம் சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் சஸ்பெண்ட்: ஓய்வுபெற 2 நாட்களே உள்ள நிலையில் நடவடிக்கை

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக டெண்டர் விட்ட வழக்கில் சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சியில் உதவி பொறியாளராக பணியாற்றினார் நந்தகுமார். இவர், அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் உதவியோடு சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால், பேருந்து சாலைகள், சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட துறைகளின் தலைமை பொறியாளராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2015ம் ஆண்டு இதற்கு டெண்டர் விடப்பட்டபோது டெண்டர் மற்றும் பிற விதிகளை மீறி, முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு டெண்டர் வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால், மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், சென்னை மாநகராட்சியில் பேருந்து சாலை பிரிவில் பொறியாளராக பணியாற்றியபோதுரூ.200 கோடி ஊழல் நடந்துள்ளது. மேலும், நந்தகுமார் தலைமை பொறியாளராக நியமிக்கப்பட்ட பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியின் உறவினர்களுக்கு, வங்கிகளிடமிருந்துரூ.25,000 கோடி கடனாக பெற்று தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பின்னர், திமுக ஆட்சிக்கு வந்ததும் சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளராக பணியாற்றி வந்த நந்தகுமார் பூங்கா துறைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், மாநகராட்சியில் நடைபெற்ற பேருந்து சாலைகள்,மழை நீர் வடிகால் மற்றும் பேருந்து நிழற்குடை டெண்டர் ஊழல்களில் முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி கூட்டாளிகளுக்கு திட்டமிட்டு டெண்டர் கொடுத்ததாக எழுந்த புகாரில் விசாரணைக்கு உள்ளானார். இந்நிலையில் ஓய்வு பெறும் நிலையில், சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கு லஞ்ச ஒழிப்புதுறை வழக்கு நிலுவையில் உள்ளது சுட்டிகாட்டப்பட்டுள்ளது. மேலும், இம்மாதம் 31ம் தேதியுடன் ஓய்வு பெற இருந்த நந்தகுமாரை தற்காலிமாக பணி நீக்கம் செய்து,அரசு உத்தரவிட்டுள்ளது

The post அதிமுக முன்னாள் அமைச்சருக்கு ஆதரவாக டெண்டர் விட்ட விவகாரம் சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் நந்தகுமார் சஸ்பெண்ட்: ஓய்வுபெற 2 நாட்களே உள்ள நிலையில் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: